முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு
தமிழக செய்திகள்

ஏரியில் சட்டவிரோதமாக மண் அள்ளியதாக வழக்கு: உயர்நீதிமன்றத்தில் எ.வே. வேலு மனு

அரசு 8 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக புகார் அளிக்கப்பட்டது.

திமுக-வின் வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. மாநாடு நடைபெற்ற இடத்தை சமன் செய்வதற்காக அருகில் உள்ள ஏரியில் இருந்து 12 ஏக்கர் வரை சுமார் 12 அடி ஆழம் வரை மணல் சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்பட்டதாகவும் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு மற்றும் அவரது மகன் குமரன் மீது அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்தது.

அரசுக்கு 8 கோடி ரூபாய் இழப்பு

இதனால் அரசுக்கு 8 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அந்த இயக்கம் புகார் அளித்திருந்தது. இதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை எ.வ. வேலு மீது வழக்குப்பதிவு செய்திருந்தது.

உயர்நீதிமன்றத்தில் எ.வ. வேலு மனு

இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எ.வ. வேலு மற்றும் அவரது மகன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தப்படாமல் வழக்கு போடப்பட்டுள்ளது. இதனால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT