தமிழக செய்திகள்

பால்வடிந்த வேப்ப மரத்திற்கு பொதுமக்கள் வழிபாடு

2-வது நாளாக இன்றும் வேப்ப மரத்தில் பால்வடிந்த வண்ணம் உள்ளது.

வேப்ப மரத்தின் உச்சியில் பால் வடிந்த காட்சியை அவர்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். அப்பகுதி மக்கள் வேப்ப மரத்திற்கு மஞ்சள், குங்குமம் வைத்து பூஜைகள் செய்து வழிபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பெரிய தெரு, வண்டி மலைச்சி அம்மன் கோவில் அருகே வேப்பமரம் உள்ளது.

பால் வடிந்தததால் பரபரப்பு

இந்த மரத்தில் இருந்து நேற்று திடீரென பால் வடிய தொடங்கியது. பலமணி நேரம் தொடர்ந்து பால் வடிந்துகொண்டே இருந்தது. இதைக்கண்டதும் அப்பகுதி மக்கள் பலர் அங்கு திரண்டனர். மேலும் இதை கேள்விப்பட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் அங்கு குவிந்தனர்.

வேப்ப மரத்தின் உச்சியில் பால் வடிந்த காட்சியை அவர்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். அப்பகுதி மக்கள் வேப்ப மரத்திற்கு மஞ்சள், குங்குமம் வைத்து பூஜைகள் செய்து வழிபட்டனர்.

2-வது நாளாக....

தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் வேப்ப மரத்தில் பால்வடிந்த வண்ணம் உள்ளது. இதை பொதுமக்கள் அதிசயமாக பார்த்து வருவதோடு மஞ்சள், குங்குமம் வைத்து பூஜைகள் செய்து வழிபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

SCROLL FOR NEXT