தமிழக செய்திகள்

திருமாவளவனை முதல்வராக்க மறுத்த ஈபிஎஸ், நான்தான் முதல்வராக இருப்பேன் என்றார்! - சி.வி.சண்முகம்

எடப்பாடி பழனிசாமி புதிதாக ஒரு விளக்கத்தை தருகிறார்.

பதவி ஆசைக்காக தவெகவை ஆதரிப்பதாக எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு சி.வி.சண்முகம் பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் சி.வி.சண்முகம் கூறியதாவது:-

சில அதிமுக உறுப்பினர்கள் தவெக அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளது. கொறடா உத்தரவை மீறி வாக்களிப்பு என இபிஎஸ் கூறுகிறார். அவர் கூறுவது சட்டரீதியாக தவறான கருத்து.

பொதுச்செயலாளர் கொறடாவை நேரடியாக நியமிக்க முடியாது. எம்எல்ஏக்களால் தான் கொறடாவை தேர்வு செய்ய முடியும்.

சட்டமன்றக் குழுக கூட்டத்தை கூட்டி தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். சட்டமன்ற குழுத் தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டத்தை நடத்தவே இல்லை.

எடப்பாடி பழனிசாமி புதிதாக ஒரு விளக்கத்தை தருகிறார். தனது பலவீனத்தை மறைக்க தவறான தகவலை எடப்பாடி பழனிசாமி சொல்கிறார்.

தான் எம்எல்ஏ-க்களால் தேர்வானதாக இபிஎஸ் கூறுவது பொய். அது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் எப்போது? எங்கு? நடைபெற்றது. கடைசியாக எப்போது எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது என்பதை இபிஎஸ் கூற முடியுமா?

அதிமுக எம்எல்ஏக்கள் தீர்மான புத்தகத்தை இபிஎஸ் வெளியிடுவாரா?

சபாநாயகரிடம் இபிஎஸ் கொடுத்தது போலியான கடிதம். 27 உறுப்பினர்களின் கையெழுத்தை பெற்று நாங்கள் கடிதம் வழங்கினோம்.

கடைசியாக நடந்த கூட்டத்தில் இபிஎஸ்க்கும் எங்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. புதுச்சேரியில் வேறு காரணத்திற்காக எம்எல்ஏக்களிடம் இபிஎஸ் கையெழுத்து பெற்றார்.

நான் மேலே பேசிவிட்டேன். நாம் ஆட்சியமைக்கிறோம் எனக்கூறி கையெழுத்து பெற்றார்.

அதிமுகவின் சட்டமன்ற குழு நிர்வாகிகள் பட்டியல் அங்கீகரிக்கப்படவில்லை. வேறேதோ காரணத்திற்கு பெற்ற கையெழுத்தை இபிஎஸ் பயன்படுத்தினார்.

இபிஎஸ் போலி கடிதத்தை கொடுத்ததால் ஆட்சேப கடிதத்தை வழங்கினோம். முழுமையாக விசாரணை செய்ய வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை.

திமுக ஆதரவோடு என் தலைமையில் ஆமைகிறது என இபிஎஸ் கூறினார்.

திமுக முன்னாள் அமைச்சர்கள் 2 பேர் எங்களை தொடர்பு கொண்டனர். நல்ல பதவி வாங்கிக்கொள்ளுங்கள் என திமுக முன்னாள் அமைச்சர்கள் கூறினர்.

நாங்க அமைச்சர் பதவிக்காக தவெக அரசுக்கு ஆதரவு அளித்தோம் என்றால், நீங்க சன்னியாசம் செய்ய வந்தீங்களா?

அரசியல் செய்யுறவன் எல்லாம் பதவிக்கு வரதுக்குதான் நினைப்பான்.

திருமாவளவனை முதல்வராக்க மறுத்த ஈபிஎஸ், நான்தான் முதல்வராக இருப்பேன் என்றார்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.