தமிழக செய்திகள்

தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க சேர்ந்த விரக்தியில் பேசுகிறார் இ.பி.எஸ்- திருமாவளவன்

கொள்கை அடிப்படையில் முரண்பட்டு நிற்கும் அதிமுக-பாஜக தேர்தல் ஆதாயத்திற்காக இணைந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அதிமுக கூட்டணி பலமில்லாததால், பொருந்தாக் கூட்டணியாக இருப்பதால் பழனிசாமி விரக்தியில் உள்ளார்.

கூட்டணி மீதான விரக்தியால் தனிநபர் விமர்சனங்களை பழனிசாமி முன்வைக்கிறார் என நினைக்கிறேன்.

கொள்கை அடிப்படையில் முரண்பட்டு நிற்கும் அதிமுக-பாஜக தேர்தல் ஆதாயத்திற்காக இணைந்துள்ளது.

பாஜக, அமமுக, பாமக ஆகியவை முன்பு அதிமுகவை விமர்சித்தாலும் தேர்தலுக்காக மட்டுமே இப்போது இணைந்துள்ளன.

பிரேமலதா திமுக கூட்டணியில் சேர்ந்த ஏமாற்றம், விரக்தி, ஆத்திரத்தில் பழனிசாமி பேசி வருகிறார்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.