தமிழக செய்திகள்

ஆந்திரா முன்னாள் முதல்வரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி

திருமண நிகழ்வில் பங்கேற்க ஜெகன் மோகன் ரெட்டி சென்னை வந்திருந்தார்முதல்வர் மு.க. ஸ்டாலின், ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேசினார்.

உறவினரின் மகன் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக ஆந்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சி தலைவருமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி சென்னை வந்துள்ளார்.

ஒய்.எஸ். சுனில் ரெட்டியின் (ஒய்.எஸ். ஜெகனின் தந்தைவழி மாமா ஒய்.எஸ். ஜார்ஜ் ரெட்டியின் மகன்) மகன் சாஹிலின் திருமணத்தில் பங்கேற்பதற்காக அவர் சென்னையில் இருக்கிறார். சாஹில் மற்றும் வேதிகாவின் திருமணம் இன்று காலை நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் உறவினர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோ ஆந்திரா முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேசினர்.

இந்நிலையில், இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை YSR காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

SCROLL FOR NEXT