தமிழக செய்திகள்

சட்டசபை செயலாளரை சந்தித்து தகுதி நீக்கம் கோரிக்கை வைத்த இ.பி.எஸ்

தனது ஆதரவு நிர்வாகிகளுடன் இபிஎஸ் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

தவெக அரசுக்கு ஆதரவளித்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரின் கட்சிப் பதவிகளை பறித்த நிலையில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் இபிஎஸ் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

ஆர்.பி.உதயகுமார், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது.

அதிமுக பிளவுப்பட்டுள்ள நிலையில் இரு தரப்பினரும் சபாநாயகரை தனித்தனியே சந்திக்கின்றனர்.

இந்நிலையில், சட்டப்பேரவை செயலாளரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி அணி எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய வலியுறுத்தியுள்ளார்.

மேலும் கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.