தமிழக செய்திகள்

தோல்வி பயத்தால் 3ம் தர பேச்சாளர் போல் பேசி வருகிறார் இ.பி.எஸ்..!- தமிழச்சி தங்கபாண்டியன்

எடப்பாடி பழனிசாமி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்போம்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன், கனிமொழி சோமு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர்.

இதுகுறித்து திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறியதாவது:-

தேர்தல் களத்தில் ஒரு பெண்ணை அவதூறாக பேசினாலும் ஒட்டுமொத்த பெண்களையும் பேசுவது போல்தான்.

கனிமொழி குறித்த அவதூறு பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்போம்.

தேர்தலில் 2ம் இடத்திலிருந்து 3ம் இடத்திற்கு சென்று விடுவோமோ என்ற டென்ஷனின் உச்சத்தில் இருக்கிறார் இபிஎஸ்.

தோல்வி பயத்தின் காரணமாக மூன்றாம் தர பேச்சாளர் போல் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.