தவெகவினரின் செயல்பாடுகள் எல்லைமீறி செல்வதாக சென்னை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தவெக அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் செயல்பாடு வெட்கக்கேடானது. தவெகவின் 6 மாத ஆட்சியை மக்கள் எள்ளி நகையாடுகின்றனர்.
டெல்லி சென்றபோது மேகதாது அணை குறித்து ஏன் முதல்வர் பேசவில்லை. டெல்லியில் மூத்த காங்கிரஸ் தலைவர்களிடம் மேகதாது தொடர்பாக பேசியிருக்க வேண்டும்.
டெல்லி சென்ற முதலமைச்சர் விஜய் மேகதாது விவகாரம் குறித்து கர்நாடக முதலமைச்சருடன் பேசியிருக்க வேண்டும். ஏன் பேசவில்லை?
சோனியாவின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் விஜய் அங்கு வைத்து கர்நாடக முதலமைச்சரிடம் பேசியிருக்கலாம்.
குற்றங்களை தடுக்க வேண்டிய காவல்துறையினர் புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகின்றனர்.
தமிழக மக்களின் பிரச்சனைகள் குறித்து முதலமைச்சர் விஜய் பொதுவெளியில் பேச வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.