தமிழக செய்திகள்

எண்ணூர் அருகே 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து மீனவர் பலி

எண்ணூர் அருகே 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து மீனவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எண்ணூர் அடுத்த எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு 13-வது பிளாக்கில் வசித்து வந்தவர் குமார்(வயது 47). மீனவர். நேற்று இரவு குமார் 4-வது மாடியில் உள்ள வீட்டின் மொட்டைமாடியில் தூங்க சென்றார். நள்ளிரவில் எழுந்தபோது திடீரென அவர் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி

இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து எண்ணூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT