தமிழக அரசு  
தமிழக செய்திகள்

லைட் ஹவுஸ்- திரு.வி.க.பாலம் வரை உயர்மட்ட சாலை: விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரியது தமிழக அரசு

புதிய உயர்மட்ட சாலை அமைந்தால், மெரினா கடற்கரை சாலையில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் கலங்கரை விளக்கம் முதல் திரு.வி.க. பாலம் வரை 4 கிமீ உயர்மட்ட சாலை அமைக்கும் திட்டத்திற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. ரூ.38.10 லட்சம் மதிப்பீட்டில், 60 நாட்களில் திட்ட அறிக்கை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது மெரினா கடற்கரை சாலையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையின் மிக முக்கிய கடற்கரை சாலையான கலங்கரை விளக்கம் முதல் அடையாறு திரு.வி.க. பாலம் வரை 4 கிலோ மீட்டர் நீளத்திற்கு உயர்மட்ட சாலை அமைக்கும் திட்டத்திற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.

டெண்டர்

இதற்காக விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்.) தயாரிக்க, நெடுஞ்சாலைத்துறையின் சென்னை நகர சாலைகள் கோட்டம் டெண்டர் கோரியுள்ளது.

இதன் மொத்த மதிப்பீடு ரூ.38 லட்சத்து 10 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெண்டர் பணியை மேற்கொள்ள 60 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிக்க முன்வைப்புத் தொகையாக ரூ.29,500 செலுத்த வேண்டும். டெண்டர் கட்டணம் இல்லை. தகுதியான ஒப்பந்ததாரர்கள் பங்கேற்கலாம்.

இந்த புதிய உயர்மட்ட சாலை அமைந்தால், மெரினா கடற்கரை சாலையில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT