தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் 5 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு யானைகள் புத்துணர்வு முகாம் வருகிற டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது.
தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில்கள் மற்றும் மடங்களில் உள்ள யானைகளுக்கு இயற்கை சூழலில் ஓய்வு அளிக்கவும், ஊட்டச்சத்து, மருத்துவ சிகிச்சையுடன் மனஅழுத்தத்தை போக்கி முழு ஓய்வு அளித்து பராமரிக்க ஏதுவாக, மேட்டுப்பாளையம் பகுதியில் ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன.
புதிதாக பொறுப்பேற்ற த.வெ.க. அரசு மேட்டுப்பாளையம் பகுதியில் மீண்டும் யானைகள் புத்துணர்வு முகாமை நடத்துவது என்று முடிவு செய்தது. மேலும் இந்த முகாமுக்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தொடர்ந்து தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் 5 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு யானைகள் புத்துணர்வு முகாம் வருகிற டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
48 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் சுமார் 40 யானைகள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இந்த யானைகளுக்கு எடைக்கேற்ப சத்தான பசுந்தீவனம், கரும்பு, பழங்கள், மூலிகை மருந்துகளுடன் தினசரி நடைப்பயிற்சி, ஆற்றில் குளியல், மசாஜ் மற்றும் கால்நடை மருத்து வர்களின் தொடர் பரிசோதனை ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளன.
இதற்கிடையே மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் யானைகள் முகாம் அமைய உள்ள இடத்தில் பாகன்கள் தங்கும் அறை, யானைகளுக்கான தீவனம்-மருந்து பொரு ட்கள் வைப்பறை, கண்காணிப்பு கோபுரங்கள், சமையல் கூடம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன.
இதில் முதல்கட்டமாக அடர்வனத்தில் உள்ள காட்டு யானைகள் நுழை யாத வகையில் முகாமை சுற்றிலும் தகர கொட்ட கைகள் மற்றும் மின்சார வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த முகாமில் பங்கேற்க உள்ள யானைகளை குளிப்பா ட்டும் பகுதியில் தரை முழு வதும் சிமெண்டு பூசும் பணிகளை நிறைவுபெற்று விட்டது. தொடர்ந்து அங்கு யானைகளுக்காக பிரத்தியேக ஷவர் அமைக்கும் பணிகளும் முடிவு பெற்று உள்ளன.
மேட்டுப்பாளையம் யானைகள் புத்துணர்வு முகாமில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை வனத்துறை, மின்வாரியம், இந்துசமய அறநிலையத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மேற்பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
காட்டு யானைகள்
இதற்கிடையே காட்டு யானைகளின் வழித்தடமாக இருப்பதால் தேக்கம்பட்டி பகுதியில் யானைகள் முகாமை நடத்தக்கூடாது. அப்படி நடத்தினால் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இங்கு நடைபெற உள்ள முகாமை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பல்வேறு கட்டங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர்.