தமிழக செய்திகள்

தமிழகம் முழுவதும் மின்சார வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

ஸ்மார்ட் மீட்டர் திட்டம் அமல்படுத்தப்பட்டால் 200 யூனிட் இலவசம் மின்சாரம் ரத்தாகும்.

மின் வினியோக பகுதிகளை ஒட்டுமொத்தமாக தனியார் மயமாக்கும் இந்த அறிவிப்பு மின்வாரிய பணியாளர்கள், பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநிலத் தலைவர் எஸ்.கண்ணன், பொதுச் செயலாளர் ஜெய்சங்கர், பொருளாளர் வெங்கடேசன் ஆகியோர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் 6 பகுதிகளாக மறுசீரமைக்கப்பட்ட மின்விநியோகத் திட்டம் ஸ்மார்ட் மீட்டர் பொறுத்திட ஒப்பந்த புள்ளி அழைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. அதில் சென்னை மண்டலத்தில் உள்ள 5 மின் திட்டங்களிலும், அதேபோல காஞ்சீபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், கோவை, ஈரோடு, கரூர், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட 12 மண்டலங்களில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்திட ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மின் வினியோகம்

மின் வினியோக பகுதிகளை ஒட்டுமொத்தமாக தனியார் மயமாக்கும் இந்த அறிவிப்பு மின்வாரிய பணியாளர்கள், பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்மார்ட் மீட்டர் திட்டம் அமல்படுத்தப்பட்டால் 200 யூனிட் இலவசம் மின்சாரம் ரத்தாகும். விவசாயத்திற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும். இதுவரை பயன்படுத்திய மின்சாரத்திற்கு மின் கட்டணம் செலுத்தியது போய் பயன்படுத்த போகும் மின்சாரத்திற்கு முன் கூட்டியே பணம் செலுத்தி பெற வேண்டிய நிலை ஏற்படும்.

மின்சாரம்

பணம் உள்ளவர்களுக்கே மின்சாரம் என்ற நிலை உருவாகும். மின்வாரியத்தில் பணிபுரியும் பல ஆயிரம் தொழிலாளர்கள் பணி இழக்க நேரிடும். தனியாருக்கு தாரை வார்க்கும் இத்திட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றோம். தனியாரிடம் ஒப்படைக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அமல்படுத்திட வெளியிடப்பட்டு உள்ள ஒப்பந்தப் புள்ளியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

இதைக் கண்டித்து வருகிற 12, 13, 14-ந்தேதிகளில் அனைத்து கோட்ட செயற் பொறியாளர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டமும் 15-ந் தேதி அனைத்து வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும். 22-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தப்படும். நவம்பர் முதல் வாரத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு செல்வது எனவும் முடிவு செய்து உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

SCROLL FOR NEXT