மணலி சின்ன சேக்காடு பகுதியைச் சேர்ந்த குடியிருப்புகளுக்கு சாத்தாங்காடு மின்வாரிய பிரிவு அலுவலகத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படுகிறது. இன்று காலை மழை பெய்து கொண்டிருந்த போது சின்ன சேக்காடு பார்த்த சாரதி தெருவில் உயர் மின் அழுத்த மின் கம்பி திடீரென்று அறுந்து கீழே விழுந்தது.
மின் கசிவு விழுந்த இடத்தில் மழை நீர் தேங்கி இருந்ததால் அந்தப் பகுதி முழுவதும் மின்சாரம் கசிவு ஏற்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து அலறிய அடித்து ஓட்டம் பிடித்தனர். அதிஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தகவல் அறிந்த கவுன்சிலர் கீர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் மின் வயர் அருகில் செல்லாமல் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு, உடனடியாக சாத்தாங்காடு மின்வாரிய அலுவலக தகவல் கொடுத்தார். பின்னர் அப்பகுதியில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. மின் ஊழியர்கள் விரைந்து வந்து அறுந்து விழுந்த மின் வயரை சரி செய்தனர். அதன் பின்னர் அப்பகுதியில் மின் விநியோகம் சீரானது.