தமிழக செய்திகள்

நீட் மறு தேர்வு: வரும் 21ம் தேதி அன்று வார நாட்கள் அட்டவணையில் ரெயில் இயக்கம்

நீட் மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துவருகின்றனர்.

நீட் மறு தேர்வு ஜூன் 21-ம் தேதி நடத்தப்​படும் என தேசிய தேர்வு முகமை அறி​வித்துள்ளது. நீட் வினாத்தாள் கசிவு விவாகரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சமூக வலைதளம் மூலம் பிரபலமான கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நாடுமுழுவதும் பல்வேறு நகரங்களில் போராட்டம் மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே, நீட் மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துவருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் ஜூன் 21-ம் தேதி நீட் மறுதேர்வு நடைபெறும் அன்று வார அட்டவணைப்படி ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது

ஞாயிற்றுக்கிழமை ஆயினும் வார இறுதி அட்டவணையில் வாராந்திர அட்டவணையில் ரெயில்கள் இயங்கும். மாணவர்களுக்கு உதவ முக்கிய ரெயில்கள் நிலையங்களில் சிறப்பு நீட் உதவி மையங்களும் அமைக்கப்பட உள்ளன. சென்ட்ரல், சென்னை எழும்பூர், தாம்பரம், பெரம்பூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆவடி, திருவள்ளூர், காட்பாடி ஆகிய நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.