தமிழக செய்திகள்

செஞ்சி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

சின்னதுரை வீட்டின் அருகே இருந்த மின்கம்பத்தில் ஏறி மின்சார ஒயரை சரி செய்ய முயன்றார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஏம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை (35). அவரது வீட்டிற்கு செல்லும் மின்சார ஒயர் இணைப்பில் கோளாறு ஏற்பட்டது. அதனால் அவர் வீட்டின் அருகே இருந்த மின்கம்பத்தில் ஏறி மின்சார ஒயரை சரி செய்ய முயன்றார்.

அப்போது அவரை மீது மின்சாரம் தாக்கியது. இதில் சின்னதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த அவரது உடல் மின்கம்பத்தில் தொங்கியது.

இதையடுத்து உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், போலீசார் உதவியுடன் மின்கம்பத்தில் இருந்து சின்னதுரை உடல் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.