தமிழக செய்திகள்

நெருங்கும் தேர்தல்..! பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வெற்றி பெற நேரில் வாழ்த்திய இயக்குநர் பா.ரஞ்சித்

தமிழகம் முழுவதும் வீதி வீதியாக பிரசாரம் நடந்து வருகிறது.

தமிழக சட்டசபை தேர்தல் 23-ந் தேதி நடக்கிறது. 234 தொகுதிகளில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், த.வெ.க. என 4 முனை போட்டி நிலவி வருகிறது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 பேர் தயார் நிலையில் உள்ளனர். இந்த முறை 100 சதவீத வாக்கு சதவீதத்தை எட்டுவதற்கு தேர்தல் ஆணையம் தகுந்த விழிப்புணர்வு பிரசாரங்களையும் முன்னெடுத்துள்ளது.

தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். தமிழகம் முழுவதும் வீதி வீதியாக பிரசாரம் நடந்து வருகிறது.

இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் திரு.வி.க. நகர் தொகுதியில் போட்டியிடும் பொற்கொடி ஆம்ஸ்ட்ரங்-ஐ, இயக்குநர் பா.ரஞ்சித் சந்தித்து வாழ்த்தியதுடன் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.