தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக தமிழக வெற்றி கழகத்தை இந்திய தேர்தல் ஆணையம் உறுதி செய்தது.
தமிழக வெற்றிக்கழகம் சந்தித்த முதல் தேர்தலிலேயே அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விசில் சின்னத்தில் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக தமிழக வெற்றிக்கழகத்தை இந்திய தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. மேலும், தமிழக வெற்றிக்கழக தேர்தல் சின்னமான விசில் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் மாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 6 இல் இருந்து 7-ஆக உயர்ந்துள்ளது.
திமுக, அதிமுக, சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், தேமுதிக ஆகிய 6 கட்சிகள் மாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆகும். அந்த பட்டியலில் த.வெ.க.கட்சியும் இப்போது சேர்க்கப்பட்டுள்ளது.
எனவே இந்த இடைத்தேர்தலில் த.வெ. க. வேட்பாளர்களுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்படுவது உறுதியாகி உள்ளது.