தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 23ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மே.4ம் தேதி முடிவுகள் வெளியாக உள்ளன.
இதனையொட்டி அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீடு, பிரச்சாரம் என தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு தவெகவின் 20 நட்சத்திர பேச்சாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண் ராஜ், செங்கோட்டையன் ஆகியோர் பிரச்சாரத்திற்கு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
இதுபோல், சி.டி.நிர்மல் குமார், ராஜ்மோகன், நாஞ்சில் சம்பத் உள்பட தவெகவின் 20 நட்சத்திர பேச்சாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை பல்வேறு கட்சிகளை சேர்ந்த 334 நட்சத்திர பேச்சாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.