தமிழக செய்திகள்

லிப்டில் சிக்கி முதியவர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை

துணி வாங்க லிப்டில் சென்ற தொழிலாளி சுப்பிரமணியின் கை லிப்டில் சிக்கி துண்டானது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட முதியவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியில் லிப்டில் சிக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பில் துணிகளை வாங்க லிப்டில் சென்ற இஸ்திரி செய்யும் தொழிலாளி சுப்பிரமணியின் கை லிப்டில் சிக்கி துண்டானது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட முதியவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT