தமிழக செய்திகள்

எழும்பூர்-மதுரை இடையிலான தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதி நேரமாக ரத்து

மதுரையில் இருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதி நேரமாக மதுரை-திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22671) வருகிற 20-ந் தேதி திண்டுக்கல்-மதுரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில், மதுரையில் இருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22672) பகுதி நேரமாக மதுரை-திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது. மேலும், இந்த ரெயில் மதுரைக்கு பதிலாக திண்டுக்கல்லில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்படும்.

மதுரையில் இருந்து வருகிற 17-ந் தேதி மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு வரும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22672) 1 மணி நேரம் தாமதமாக மாலை 4.30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.