தமிழகம் முழுவதும் உள்ள துணை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டிப்ளமோ, பிஎஸ்சி நர்சிங் முடித்த நர்சுகள் 2000க்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரத்தில் பங்கேற்றனர்.
தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு, நிலுவையில் உள்ள தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
தமிழகம் முழுவதும் உள்ள துணை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டிப்ளமோ, பிஎஸ்சி நர்சிங் முடித்த நர்சுகள் 2000க்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரத்தில் பங்கேற்றனர்.
தமிழகம் முழுவதும் இருந்து வந்த நர்சுகள் தரையில் அமர்ந்து அமைதியான வழியில் அரசின் கவனத்தை ஈர்த்தனர். சங்க மாநில தலைவி சுந்தரி, மாநில செயலாளர் ஜெய சூர்யா, பொருளாளர் சூர்யா ஆகியோர் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதுகுறித்து மாநிலத் தலைவி சுந்தரி கூறியதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள 4848 நல வாழ்வு மையங்களிலும் பணியாற்றி வருகிறோம். கர்ப்பகால மற்றும் பிரசவ சேவைகள் சிசு மற்றும் குழந்தைகள் சேவைகள், குடும்ப நலம் கருத்தடை பேறுகால சேவைகள் உள்ளிட்ட அனைத்து விதமான பணிகளை செய்து வருகிறோம்.
வரும் காலங்களில் நலவாழ்வு மையங்களில் தரமான மருத்துவ சேவை வழங்கப்பட இருப்பதால் இடைநிலை சுகாதாரப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வில்லை என்றால் தொடர்ந்து போராட்டத்தை ஏறெடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.