தமிழக செய்திகள்

நாகர்கோவில் ஜெயிலில் பாதுகாப்பை பலப்படுத்தும் பணிகள் தீவிரம்

சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்றதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் பாதுகாப்பை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

குமரி மாவட்டத்தில் உள்ள சிறைகளிலும் பாதுகாப்பை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. ​

தமிழகத்தில் தேனி மாவட்ட சிறையில் ஏராளமான தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நாகர்கோவில் தளவாய்புரத்தைச் சேர்ந்த ரெஜின் உள்பட 17 கைதிகள் தப்பிச் சென்றனர். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு தப்பி ஓடிய 17 பேரையும் 2 நாட்களில் கைது செய்தனர்.

தேனி

அவர்களை தேனியில் இருந்து வேறு சிறைகளுக்கு மாற்ற போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். தொடர்ந்து 17 பேரும் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்றதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் பாதுகாப்பை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

சிறை கைதிகள்

குமரி மாவட்டத்தில் உள்ள சிறைகளிலும் பாதுகாப்பை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. ​நாகர்கோவில் சிறையை சுற்றியுள்ள மதில் சுவர்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணிப்பில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறையில் உள்ள கைதிகளை பார்க்க வருபவர்களுக்கான விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டு உள்ளன.

கலெக்டர் அலுவலகம்

மேலும் சிறையை சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கிளைகள் அதிகமாக வளர்ந்து சிறைச்சுவரை மூடியவாறு உள்ளன. கலெக்டர் அலுவலகம் மற்றும் சுற்றுலா மாளிகை வளாகத்திற்குள் சிறையை ஒட்டி மரக்கிளைகள் இருந்தன. அவற்றை வெட்டி அப்புறப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ​இதனைத்தொடர்ந்து இன்று காலை தொழிலாளர்கள் அதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.

அரசு விருந்தினர் மாளிகை

நவீன எந்திரங்கள் மூலமாக சிறையைச் சுற்றியுள்ள மரக்கிளைகள் முழுமையாக வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன. கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் ஒட்டியிருந்த ராட்சத மரங்களில் இருந்த கிளைகளை தொழிலாளர்கள் வெட்டி அப்புறப்படுத்தினர். இதைத் தொடர்ந்து, அரசு விருந்தினர் மாளிகை மற்றும் சிறையின் பின்புறம் உள்ள பகுதிகளில் உள்ள மரக்கிளைகளையும் வெட்டி அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT