தமிழக சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அனல் பறக்கும் பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,
* தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. வன்முறைக் காடாக மாறி விட்டது.
* வாக்குரிமை என்பது நம் தலையெழுத்தை மாற்றும் ஜனநாயக ஆயுதம்.
* கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் திமுக அரசு ரூ.5 லட்சம் கடன் வாங்கி இருக்கிறது.
* தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்கான இறுதி யுத்தம் இது.
* அனைவரும் தவறாமல் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.