தமிழக செய்திகள்

அடையாளம் காட்டிய கட்சிக்கே துரோகம் செய்துள்ளனர்- எடப்பாடி பழனிசாமி

கொறடா உத்தரவை மீறி த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் புகார் அளிக்க உள்ளோம்.

த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்தால் நடவடிக்கை பாயும் என எச்சரித்திருந்த நிலையிலும், வேலுமணி தரப்பு அ.தி.மு.க. ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதுதொடர்பாக சட்டசபை வளாகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

* 6 அமைச்சர், வாரியத் தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டு த.வெ.க. அரசுக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிலர் ஆதரவு அளித்துள்ளனர்.

* தூய்மையான ஆட்சி நடத்துகிறேன் என சொல்லும் முதலமைச்சர் விஜய் எல்லா இடத்திலும் தூய்மையாக இருக்க வேண்டும்.

* தவறான பாதையில் முதலமைச்சர் விஜய் செல்வது வருத்தத்தை அளிக்கிறது.

* த.வெ.க. அரசுக்கு ஆதரவளித்து அ.தி.மு.க.வுக்கு சில எம்.எல்.ஏ.க்கள் துரோகம் செய்துள்ளனர்.

* கொறடா உத்தரவை மீறி த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் புகார் அளிக்க உள்ளோம்.

* அடையாளம் காட்டிய கட்சிக்கே துரோகம் செய்துள்ளனர்.

* தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்ததால் தான் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றத.

* பிரிந்து கிடக்கும் ஒரு அணியைச் சென்று முதலமைச்சர் விஜய் சந்தித்து இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.