தமிழக சட்டசபை வளாகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கவர்னர் ஆற்றிய உரை மற்றும் த.வெ.க. அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்களை முன்வைத்தார். இதனிடையே, எடப்பாடி பழனிசாமி கூறுகையில்,
* எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார். எனது மகன் அரசியலுக்கு வருவதாக கூறுவது தவறு.
* அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக மட்டுமே எனது மகன் மிதுன் உள்ளார்.
* அ.தி.மு.க.வில் எந்த பதவியிலும் எனது மகன் மிதுன் இல்லை.
* என்னுடைய மகன் மிதுன் அரசியலுக்கு வர மாட்டார் என திட்டவட்டமாக கூறுகிறேன் என்றார்.
முன்னதாக, தனது மகன் மிதுனுக்கு அ.தி.மு.க.வில் பொறுப்பு வழங்குவதாக எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.