தமிழக செய்திகள்

கீழடி ஆய்வறிக்கைக்கு ஒப்புதல் பெற வேண்டியது தி.மு.க. அரசின் கடமை - எடப்பாடி பழனிசாமி

39 அகழாய்வுகளில் 33 அகழாய்வு பணிகள் அ.தி.மு.க. ஆட்சியில்தான நடைபெற்றன.தமிழகத்தில் உள்ள நிறைய அரசுக் கல்லூரிகளில் போதிய பேராசிரியர்கள் இல்லை.

சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:

* அ.தி.மு.க. ஆட்சியில் தான் கீழடி அகழாய்வு பணிகள் முதன்முதலாக மேற்கொள்ளப்பட்டன.

* கீழடிக்கு அகழாய்வு அருங்காட்சியகத்தை உருவாக்கியது அ.தி.மு.க. அரசு தான்.

* கீழடி என் தாய்மடி என்ற பெயரை சூட்டி மகிழ்ந்தது அ.தி.மு.க. அரசில் தான்.

* கீழடியில் பிரம்மாண்டமாக அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கியது அ.தி.மு.க. அரசுதான்.

* 2020-ல் YMCA-வில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் கீழடி கண்காட்சியை காட்சிப்படுத்தியது அ.தி.மு.க. அரசு.

* 39 அகழாய்வுகளில் 33 அகழாய்வு பணிகள் அ.தி.மு.க. ஆட்சியில்தான நடைபெற்றன.

* 2018-ல் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அமெரிக்காவுக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.

* தமிழர்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றியது அ.தி.மு.க. அரசு தான்.

* அகழாய்வில் கிடைத்த பொருட்களை உலகிற்கு காட்சிப்படுத்தினோம்.

* மத்திய அரசு கேட்டதற்காக சரியான விளக்கத்தை தி.மு.க. அரசு கொடுத்ததா என தெரியவில்லை.

* கீழடி ஆய்வறிக்கைக்கு ஒப்புதல் பெற வேண்டியது தி.மு.க. அரசின் கடமையாகும்.

* தமிழகத்தில் உள்ள நிறைய அரசுக் கல்லூரிகளில் போதிய பேராசிரியர்கள் இல்லை.

* காலிப் பணியிடங்கள் இவ்வளவு இருக்கும்போது நிர்வாகம் எப்படி சிறப்பாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.