மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்டது குறித்து அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
* தமிழ்நாடு தனக்குரிய பங்கான 20 நாடாளுமன்ற இடங்களை பெறுவதற்கான வாய்ப்பு இழந்து விட்டோம்.
* 1998ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையின் கீழ் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஜெயலலிதாக கொண்டு வந்தார்.
* ஜெயலலிதா கொண்டு வந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை இந்தியா கூட்டணி கட்கிகள் தோற்கடித்தது.
* தமிழகம் தனது அரசியல் பலத்தை அதிகரித்து கொள்வதற்கு பிரதமர் வழங்கிய பொன்னான வாய்ப்பை இழந்துவிட்டோம்.
* தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள பெண்களுக்கு மிகப்பெரிய அநீதியை இழைத்துள்ளீர்கள்.
* தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு கேடு செய்துவிட்டு, பெண்கள் அதிகாரம் பெறும் வாய்ப்பை அழித்துவிட்டு கொண்டாட்டமா?
* 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் செயல்பட்டால் 9 எம்பிக்களை இழக்கும் நிலை ஏற்படும்.
* தற்போது 2026 மக்கள்தொகை அடிப்படையில் மேற்கொள்ளும்போது கூடுதலாக எம்பிக்களை இழப்போம்.
* உரிய அளவில் கூடுதலாக 20 எம்பிக்களை பெறும் வாய்ப்பை தமிழ்நாடு இழந்துவிட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.