தமிழக செய்திகள்

திமுக ஆட்சி கொடுமையான ஆட்சி - எடப்பாடி பழனிசாமி காட்டம்

ஆளுங்கட்சி எம்எல்ஏவே கிட்னி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 5 அதிமுக, 1 பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

* போலி மதுபான ஆலையை நடத்தும் திமுகவினர்.

* காவல்துறையை கண்டால் குற்றவாளிகளுக்கு பயமில்லை.

* குற்றவாளிகளுக்கு திமுகவினர் துணை நிற்கின்றனர்.

* வறுமை இல்லையென்றால் எதற்காக கிட்னியை விற்கின்றனர்.

* ஆளுக்கு தகுந்தாற்போல கொள்ளையடிக்க ஆரம்பித்து விட்டனர்.

* கிட்னி முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

* திமுக ஆட்சி கொடுமையான ஆட்சி.

* ஆளுங்கட்சி எம்எல்ஏவே கிட்னி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.

* திமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

* திமுக எம்எல்ஏவின் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

* அதிமுக ஆட்சியில் அதிக கல்விக்கூடங்கள் திறக்கப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.