அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வானதையடுத்து முதல் முறையாக அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டை எடப்பாடி பழனிசாமி மதுரையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கூட்டி உள்ளார்.
அ.தி.மு.க. வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு என்ற தலைப்பில் இந்த மாநாடு மிக பிரமாண்ட முறையில் நடத்தப்படுகிறது. அ.தி.மு.க.வின் பொன்விழா ஆண்டையொட்டி நடத்தப்படும் இந்த மாநாட்டை மிகவும் சிறப்பாக நடத்த அ.தி.மு.க. தலைமை திட்டமிட்டு அதற்கான பணிகளை முழு வீச்சில் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று மாலை மதுரைக்கு வருகை தந்தார்.
அவருக்கு வழியெங்கும் மலர்கள் தூவி, பூரண கும்ப மரியாதையுடன் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.