இந்தியாவின் மிக முக்கிய சமூகப் போராளியும் தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் பெண் சட்ட மேலவை உறுப்பினராகவும், தலைசிறந்த மருத்துவராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், பெண் கல்வி, பெண்ணுரிமை, குழந்தைகள் நலன் மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் புகழைப் போற்றி வணங்குகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.