எடப்பாடி பழனிசாமி  
தமிழக செய்திகள்

காவல் நிலைய மரணங்கள்... த.வெ.க. அரசைய சாடிய எடப்பாடி பழனிசாமி

காவல் நிலையத்தில் ஒருவர் உயிரை மாய்த்துகொள்ளும் அளவிற்கு இந்த ஆட்சியின் காவல்துறை மெத்தனமாக இருந்திருக்கிறது என்பது வெட்கத்திற்குரியது.

காவல் நிலையத்தில் ஏற்பட்டுள்ள மரணங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொடர் குற்றச்செயல்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்த ஆச்சரியக்குறி அரசை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர், காவல் நிலையத்திலேயே தன் உயிரை மாய்த்துக்கொண்டதாக அதிர்ச்சி அளிக்கின்ற செய்தி வந்துள்ளது.

சந்தி சிரிக்கிறது

சினிமா படங்களுக்கு டாப்-10 வரிசை போடுவது போல, தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கு வரிசை போடும் அளவிற்கு நிலைமை சந்தி சிரிக்கிறது.

ஒருபுறம் செஞ்சி சிறுமியை இன்னும் “தாய்மாமா” அரசின் காவல்துறை கண்டுபிடிக்கவில்லை;

மறுபுறம், மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை முதல் காஞ்சிபுரம் டாஸ்மாக் பணக் கொள்ளை வரை இன்னும் பல கொள்ளைக் குற்றங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறது தவெக அரசு.

இதே சினிமாவாக இருந்திருந்தால், குற்றவாளிகளை பாலத்தில் கட்டித் தொங்கவிட்டு Mass BGM போட்டிருப்பார். கனவு உலகத்தைக் கண்டு நிஜமான நம்பி ஆட்சியைக் கொடுத்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை இந்த தவெக கட்சிக்கு வாக்களித்த மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர்.

முதல்வர் காதுகளுக்கு எட்டுகிறதா?

காவல் நிலையத்தில் ஒருவர் உயிரை மாய்த்துகொள்ளும் அளவிற்கு இந்த ஆட்சியின் காவல்துறை மெத்தனமாக இருந்திருக்கிறது என்பது வெட்கத்திற்குரியது.

நேற்றைய தினம் இதேபோல் பண்ருட்டி பகுதி காவல் நிலையத்தில் ஒரு பெண் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டது உள்ளிட்ட தொடர் செய்திகள் முதல்வர் காதுகளுக்கு எட்டுகிறதா?

“நீதியும் வரல. சாரியும் வரல.”

Accountability என்றால் என்னவென்றாவது தெரியுமா

முதலமைச்சர் அவர்களே?

காவல் நிலையத்தில் ஏற்பட்டுள்ள இந்த மரணங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொடர் குற்றச்செயல்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்த ஆச்சரியக்குறி அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT