தமிழக செய்திகள்

தி.மு.க. ஆட்சியில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு கிடையாது - இ.பி.எஸ். தாக்கு

தி.மு.க. ஆட்சியில் வீடுகளுக்கான மின் கட்டணம் பன்மடங்கு அதிகரித்து இருக்கிறது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மாலை மலர்

சென்னை எம்.ஜி.ஆர். நகரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தி.மு.க. அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பாலியல் வன்கொடுமை, போதைப்பொருட்கள் புழக்கம், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட விவகாரங்களுக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

* தமிழகத்தில் வீட்டு வரி 100 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது.

* மக்கள் மீது வரிச்சுமையை சுமத்தும் அரசு தி.மு.க. அரசு.

* கட்டடத்திற்கான கம்பி டன்னுக்கு ரூ.60 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

* தி.மு.க. ஆட்சியில் வீடுகளுக்கான மின் கட்டணம் பன் மடங்கு அதிகரித்து இருக்கிறது.

* தி.மு.க. ஆட்சியில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு கிடையாது.

* தி.மு.க அளித்த 525 வாக்குறுதிகளில் 4ல் 1 பங்கை கூட நிறைவேற்றவில்லை.

* வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் அரசு ஊழியர்கள் வீதிகளுக்கு வந்து போராடினர்.

* இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமிக்கப்படாதது தான்.

* வருகிற தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.