திருப்பூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அதிமுக கொண்டு வந்த அத்திக்கடவு அவினாசி திட்டத்தால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது.
* ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிபடி விவசாயிகளின் 50 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றினோம்.
* திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் திட்டத்தை கொண்டு வந்தோம்.
* விவசாய பெருமக்கள் தாமாக முன் வந்து எனக்கு பாராட்டு விழா நடத்தினார்கள்.
* தமிழ்நாட்டில் தவெக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு 467 தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன.
* அமைச்சர்கள் நடத்திய ஆய்வுக்குப் பின் 467 ஆலைகளுக்கு சீல் வைத்துள்ளனர்.
* 467 ஆலைகள் மூடப்பட்டதால் ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
* ஆலை மூடப்படுவதால் நிறுவனம், பணிபுரியும் தொழிலாளர்கள் நிலை என்ன ஆகும்?
* பல நூறு கோடி ரூபாய் பணம் செலவழித்து தொடங்கப்பட்ட நிறுவனத்தின் நிலை என்ன ஆகும்.
* திமுக ஆட்சியில் மின்கொள்முதலில் முறைகேடு என தவெக அமைச்சர் நிர்மல்குமார் குற்றம் சாட்டினார்.
* ஊழல், ரத்து எனக்கூறிய அமைச்சர் எந்த ஆய்வும் நடத்தாத நிலையில் கூடுதல் விலையில் மின்கொள்முதல் செய்துள்ளார்.
* எந்தவித ஆய்வும் மேற்கொள்ளாமல் கடந்த ஆட்சியின் மின் ஒப்பந்தங்கள் ரத்து செய்துள்ளது தவெக அரசு.
* எதையும் திட்டமிடாமல் செயல்படுகின்ற அரசு தவெக அரசு.
* தவெக ஆட்சியில் மின்கொள்முதலில் 100 சதவீதம் ஊழல்.
* திருப்பூரில் ஒரு நாளில் 15 முறை மின்வெட்டு ஏற்படுகிறது.
* தவெக அரசு ஊதாரித்தனமாக திட்டமிடாமல் செயல்படுவதால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது.
* தீபாவளி தினமாகிய நேற்று ஒரு நாளில் மட்டும் 8 கொலைகள் நடந்துள்ளது.
* போதைப்பொருள் பழக்கம், கஞ்சா அதிகரித்ததால் சிறுவர்கள் உள்பட மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
* எந்த நிகழ்விற்கு சென்றாலும் முதலமைச்சர் விஜய் பத்திரிகையாளரை சந்திப்பதே இல்லை.
* ஊடகத்தினரை சந்தித்து பதிலளிப்பதில் முதலமைச்சர் விஜய்க்கு என்ன தயக்கம்.
* பத்திரிகையாளரை சந்தித்தால் தான் நாட்டு மக்களின் நிலைமையை முதலமைச்சர் தெரிந்து கொள்ள முடியும்.
* ஒரு கிலோ பொன்னி அரிசி 100 ரூபாய்க்கு மேல் விற்கிறது.
* தவெக ஆட்சியில் காவல்துறையினர் கடமையை செய்ய முடிவதில்லை.
* பெரியார் அறிவுலக நூலக ஊழல் விவகாரத்தில் நீதி விசாரணை தேவை.
* பெரியார் அறிவுலகத்தை வேகமாக திறந்து வைத்த தவெக அரசு, புத்தகங்களை ஏன் ஆய்வு செய்யவில்லை?
* இந்தியாவில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு ஜெர்மனிக்கு சென்று ஒப்பந்தம் போட்டது ஏன்?
இவ்வாறு அவர் கூறினார்.