அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, புதிய அட்டவணையை அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி 3-ந் தேதி (நாளை) ஆற்காடுக்கு பதில் வேலூர் என கூட்டம் நடைபெறும் இடம் மாற்றப்பட்டு உள்ளது. மேலும் 5-ந் தேதி நெய்வேலிக்கு பதில் கடலூர், 6-ந் தேதி கெங்கவல்லி சட்டசபை தொகுதி வீரகனூருக்கு பதில் உளுந்தூர்பேட்டை, 7-ந் தேதி உளுந்தூர்பேட்டைக்கு பதில் கெங்கவல்லியிலும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.
மேலும் 15-ந் தேதி கரூர், திருப்பூரில் பிரசாரம் செய்வதாக இருந்தது. ஆனால் இப்போது அன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி அங்கு பிரசாரம் இல்லை. 16-ந் தேதி மேட்டுப்பாளையம், கோபி செட்டிப்பாளையம் என இருந்தது. ஆனால் இப்போது கோவையில் ரோடு ஷோ, மற்றும் மேட்டுப்பாளையம் மற்றும் திருப்பூர் இடம்பிடித்து உள்ளது. 18-ந் தேதி ஏற்கனவே இருந்த திருச்செங்கோடு. ஈரோடு பகுதிகளுடன் சேர்ந்து கரூரும் இடம் பிடித்துள்ளது. 19-ந் தேதி ஏற்கனவே சேலம் மாவட்டம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது 19-ந் தேதி எந்த பகுதிகளிலும் பிரசாரம் இல்லை.