தமிழக செய்திகள்

தோல்வி பயத்தில் தரம் தாழ்ந்து பேசும் நிலைக்கு எடப்பாடி பழனிசாமி வந்துவிட்டார்..!- கனிமொழி

நம்ம வீட்டுப்பிள்ளைகளுக்கான ஆட்சி என்பதை தலைநிமிர்ந்து சொல்லி வாக்கு கேட்கிறோம்.

திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசியதாவது:-

திமுக மக்களுக்கான ஆட்சி.. குறிப்பாக பெண்களுக்கான ஆட்சி. மக்களின் முன்னேற்றத்திற்கான ஆட்சி. நம்ம வீட்டுப்பிள்ளைகளுக்கான ஆட்சி என்பதை தலைநிமிர்ந்து சொல்லி வாக்கு கேட்கிறோம்.

ஆனால், நம் எதிரணியில் இருக்கக்கூடியவர்கள் தோல்வி பயத்தால் எதை எதையோ பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி எதை சொல்வதென்று இல்லாமல் எதை எதையோ பேசிக்கொண்டிருக்கிறார்.

தோல்வி பயத்தில் தரம் தாழ்ந்து பேசும் நிலைக்கு எடப்பாடி பழனிசாமி வந்துவிட்டார்.

முதலமைச்சரை கீழ்தரமாக விமர்சிக்கிறார்.. தாம் கூட முதலமைச்சராக இருந்தோம் என்பதை மறந்துவிட்டு..

இவ்வாறு அவர் கூறினார்.