சென்னை ஈசிஆர்-ல் திட்டமிடப்பட்ட 13.3 கி.மீ நீளமுடைய 4 வழிச்சாலை உயர்மட்ட பாதை திட்டச் செலவை குறைக்க குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
திருவான்மியூர்-உத்தண்டி உயர்மட்ட சாலை திட்டச் செலவில் இருந்து 600 கோடி ரூபாய் குறைக்க தொழில்நுட்ப குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் (TNSHA) தொழில்நுட்ப குழு அமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈசிஆர் உயர்மட்ட சாலைக்கு ரூ.2,100 கோடியாக இருந்த திட்ட மதிப்பை ரூ.1500 கோடியாக குறைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
தூண் அமைப்பு, அடித்தளம், சாலை அகலம், கட்டுமான பொருள் போன்றவை தேவைக்கு மீறி உள்ளதாக கூறப்படுகிறது.
தேவைக்கு அதிகமாக உள்ள விவரக்குறிப்புகளை மாற்றி அமைத்தால் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை செலவு குறைக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
புதிய மாற்றங்களை ஏற்க மறுத்தால் திட்டத்திலிருந்து ஒப்பந்ததாரர் விலகும் வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.