தமிழக செய்திகள்

காட்டாற்று வெள்ளம் எதிரொலி: சதுரகிரி மலையேர பக்தர்களுக்கு தடை

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் பகுதியில் காலை 6 மணிக்கு மேல் மழை பெய்தது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் ஐப்பசி மாத பிரதோஷம், நேற்றும், இன்று ஐப்பசி மாத பவுர்ணமி நாளையுடன் 4 நாள் அனுமதி முடிவடைகிறது.

கடந்த 3 நாட்களாக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் பகுதியில் மழை பெய்ததால் ஓடையில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் வந்ததால் பக்தர்களை அனுமதிக்கவில்லை.

இன்று காலை 6 மணி அளவில் தாணிப்பாறை வழுக்கு பாறையில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்தாலும் பக்தர்கள் செல்லும் வழியில் ஓரளவு தண்ணீர் வந்தாலும் செல்வதற்கு அனுமதிக்கலாம் என வனத்துறை முடிவு எடுத்த நிலையில் திடீரென சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் பகுதியில் காலை 6 மணிக்கு மேல் மழை பெய்தது.

அதோடு, இன்று மழை பெய்யும் என வானிலை மையம்ரெட் அலர்ட் கொடுத்துள்ளதால் பக்தர்கள் நலன் கருதி பக்தர்களுக்கு வனத்துறை இன்று தடை விதித்துள்ளது.

தொடர்ந்து, 3 நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை. இன்று ஐப்பசி மாத பவுர்ணமி என்பதால் பல்வேறு ஊர்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் 100க்கும் மேற்பட்டோர் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தனர்.

இதற்கிடையில் மழை காரணமாக பக்தர்களுக்கு இன்று அனுமதி இல்லை என அறிவிப்பு செய்யப்பட்டது. இன்று பவுர்ணமிக்கு சுந்தர மகாலிங்கம் சாமியை தரிசிக்கலாம் என வந்த மக்களுக்கு அனுமதி இல்லாதது மன வேதனை இருந்தாலும் வனத்துறை கேட் முன்பு பத்தி, சூடம் கொளுத்தி சாமி தரிசனம் செய்து சென்றனர்.

அதோடு மொட்டை நேர்த்திக்கடனை மட்டும் பக்தர்கள் செலுத்தினர். இன்று ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் இரவில் நடைபெற உள்ளது.

அபிஷேகம் முடித்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் இன்றி சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவ லர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் கூடுதல் பொறுப்பு யுவராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT