தமிழகம் முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
டாஸ்மாக் கடைகளுக்கான மதுபானம் கொள்முதலில் கட்சி நிதி அளித்தது தொடர்பாக தமிழகம் முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூர், சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள தொடர்புடைய இடங்கள் மற்றும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இந்த சோதனை நடைபெறுகிறது
கரூரில் செந்தில் பாலாஜி வீடு, நண்பர்கள் வீடுகள் உள்ளிட்ட 6 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை கல்லாக்கோட்டையில் கால்ஸ் தனியார் மதுபான ஆலை, சென்னை தி.நகர் தணிகாசலம் சாலையில் உள்ள மதுபான நிறுவனம் தொடர்புடைய இடத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டத்தின் பீளமேடு, பொள்ளாச்சி, நரசிம்மநாயக்கன்பாளையம், நவகரை ஆகிய 4 டாஸ்மாக் கிடங்குகள் மற்றும் மதுபான ஆலையில் லஞ்ச ஒழிப்புச் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், மன்னார்குடியில் அமைந்துள்ள திமுக எம்பி டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமான மதுபான ஆலையிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அடுத்துள்ள கல்லாக்கோட்டையில் இயங்கி வரும் தனியார் மதுபான உற்பத்தி ஆலையிலும் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து அந்த ஆலையில் பணியாற்றும் 600க்கும் மேற்பட்ட ஊழி யர்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் மதுபாட்டில்களை ஏற்றி செல்ல வந்த 20க்கும் மேற்பட்ட லாரிகள் வெளியே அனுப்பப்படாமல் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தொடர் சோதனை நடைபெற்று வருவதால் அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.