நாளை மறுநாள் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் (14-ந்தேதி) காலை 10.30 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும். மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.