டிரோனில் இருந்த இறக்கை போன்ற கருவிகள் வெட்டியதில் கிழே நின்றிருந்த பக்தர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த தென்கடப்பந்தங்கல் கிராமத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.
அதன் அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள 36 அடி உயரமுள்ள முருகர் சிலை நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
கும்பாபிஷேகத்திற்கு பின்னர் பக்தர்கள் மீது டிரோன் மூலம் புனிதநீர் தெளிக்கப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக புனிதநீர் தெளித்த டிரோன் அருகில் கட்டப்பட்டிருந்த திருவிழா தோரண கொடிகளில் சிக்கி மேலிருந்து சரிந்து பக்கவாட்டில் விழுந்தது.
இதில் டிரோனில் இருந்த இறக்கை போன்ற கருவிகள் வெட்டியதில் கிழே நின்றிருந்த பக்தர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து காயமடைந்த பக்தர்கள் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்டனர்.
புனித நீர் தெளித்து டிரோன் நேரடியாக அப்படியே விழுந்திருந்தால் பெரிய அளவில் காயம் சேதம் ஏற்பட்டிருக்கும் எனவும் பக்கவாட்டில் சரிந்து விழுந்ததால் சிலருக்கு காயம் மட்டுமே ஏற்பட்டு அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக அங்கிருந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.