குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் சீரான முறையில் மேற்கொள்ளப்படும்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் மாதவரம் பால் பண்ணை மெட்ரோ ரெயில் நிலையத்தில், புழல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வியாசர்பாடி மற்றும் பட்டேல் நகர் குடிநீர் பகிர்மான நிலையத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் வடக்கு பிரதான குடிநீர் குழாயில் இணைப்பு பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளன.
இதனால் வருகிற 25-ந் தேதி காலை 9 மணி முதல் 26-ந்தேதி காலை 9 மணி வரை வியாசர்பாடி மற்றும் பட்டேல் நகர் குடிநீர் பகிர்மான நிலையங்கள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுகிறது.
எனவே மணலி மண்டலத்தில் உள்ள வடபெரும்பாக்கம், தீயம்பாக்கம், மாதவரம் மண்டலத்தில் உள்ள மேத்தா நகர், ராமசந்திரா நகர், முத்து மாரியம்மன் கோவில் தெரு, அன்னை சத்யா நகர், சந்திரபாபு காலனி பிரதான சாலை, மெஜஸ்டிக் காலனி, தணிகாசலம் நகர் எஸ்.பிளாக், பொன்னியம்மன் மேடு, தண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ள கவியரசு கண்ணதாசன் நகர், முத்தமிழ்நகர், கொடுங்கையூர், எம்.கே.பி.நகர், தண்டையார்பேட்டை, வ.உ.சி. நகர், ஜெ.ஜெ.நகர், கொருக்குபேட்டை, தண்டையார்பேட்டை மணி கூண்டு, காசிமேடு, ராயபுரம் சுப்பிரமணிய தெரு, பெரம்பூர் பி.பி.ரோடு, வியாசர்பாடி தெற்கு, திரு.வி.க.மண்டலத்தில் உள்ள மூலக்கடை, அயனாவரம், மாதவரம் நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்து கொள்ள வேண்டும். அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள குடிநீர் வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்யலாம். குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் சீரான முறையில் மேற்கொள்ளப்படும்.
இந்த தகவலை சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்து உள்ளது.