சேலம் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
மேட்டூர் அணையில் இருந்து சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் குழாய் செல்கிறது. இந்த நிலையில் தாதகாப்பட்டி, கொண்டலாம்பட்டி, மணியனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லும் பிரதான குழாய் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கந்தம்பட்டி என்ற பகுதி வழியாக செல்கிறது.
இந்த நிலையில் இந்த பிரதான குடிநீர் குழாயில் இன்று அதிகாலை 4 மணியளவில் திடீரென உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து வெளியேறிய தண்ணீர் அருவி போல் பனை மரம் உயரத்திற்கு பீறிட்டு வெளியேறியது. இந்த தண்ணீர் தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. அதிகாலை முதல் சாலையில் குடிநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதுகுறித்து தகவல் அறிந்து சேலம் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.