தமிழக செய்திகள்

மறுபடியும் முதல்ல இருந்தா..! எழும்பூரில் இருந்து செல்லும் ரெயில்கள் 5 நாட்களுக்கு ரத்து

புறநகர் ரெயில் சேவை நேற்று முதலே வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டது.

சென்னை எழும்பூர் ரெயில் நிலைய சீரமைப்பு பணி நிறைவு பெற்றுள்ளதால், புறநகர் ரெயில் சேவை இன்று முதல் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்​பூர் ரெயில் நிலை​யத்​தில் ரூ.735 கோடி மதிப்​பில் மறுசீரமைப்பு பணி​கள் முழு​வீச்​சில் நடைபெற்று வந்தன. இதன் ஒரு பகு​தி​யாக, பிர​மாண்ட நடைமேம்​பாலம் அமைக்​கும் பணி நடந்து வந்தது. இதற்கு அடித்​தளம் அமைக்​கும் பணி காரண​மாக, 10 மற்றும் 11-வது நடைமேடைகள் மூடப்​பட்​டன.

இதனால், கடற்​கரை - தாம்​பரம் - செங்கல்பட்டு வழித்தடத்​தில் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந்தேதி முதல் 44 மின்​சார ரெயில் சேவை​கள் ரத்து செய்​யப்​பட்​டன. 10, 11-க்கு பதிலாக, 5, 6-வது நடைமேடைகளில் புறநகர் மின்​சார ரெயில்​கள் இயக்​கப்​பட்டு வந்தன.

வழக்​க​மான ரெயில் சேவை குறைக்​கப்​பட்​டு தற்​காலிக கால அட்​ட​வணைப்​படி 20 நிமிடங்​களுக்கு ஒரு மின்​சார ரெயில் இயக்​கப்படு​கிறது. இது மட்​டுமின்​றி, இரு மார்க்​கத்​தி​லும் எழும்​பூர் நோக்​கிச் செல்​லும்​போது ரெயில்​கள் தாமத​மாக இயக்கப்படுகின்றன. மேலும் எழும்​பூர், சென்ட்​ரலுக்கு உரிய நேரத்​தில் செல்ல முடி​யாமல் விரைவு ரெயில்​களை தவற​விடும் நிலை​யும் ஏற்​படு​கிறது. இதனால், பயணி​கள் கடும் அவதியடைந்து வந்தனர்.

எழும்​பூர் ரெயில் நிலை​யத்​தின் 10, 11-வது நடைமேடைகளில் இருந்து வழக்​க​மான புறநகர் மின்​சார ரெயில் சேவை வருகிற 5-ந்தேதி முதல் தொடங்​கும் என்று ரெயில்வே அதிகாரி​கள் தெரி​வித்​தனர்.

சென்னை எழும்பூர் ரெயில் நிலைய சீரமைப்பு பணி நிறைவு பெற்றுள்ளதால், புறநகர் ரெயில் சேவை நேற்று முதலே வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டது.

மேலும், பழைய அட்டவணைப்படி மின்சார ரெயில் சேவை இயங்​கத் தொடங்​கும் என தெரிவித்ததால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

சென்னையில் புறநகர் மின்சார ரெயில் சேவை முழுவதுமாக தொடங்கிவிட்டதாக ரெயில்வே தெரிவித்திருந்த நிலையில், தற்போது எழும்பூரில் நடைமேடை பணிகளால் இன்று, நாளை மற்றும் 6, 7, 8 தேதிகளில் பல ரெயில் சேவைகளை ரத்து செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.