தமிழக செய்திகள்

சென்னை மெட்ரோ ரெயில் சேவை: 3 புதிய வழித்தட நீட்டிப்புக்கு வரைவு திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு பரிந்துரை!

சென்னை வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரெயில் சேவை விரைவில் துவங்கும்.

சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், தொலைதூரப் பகுதிகளை நகருடன் இணைக்கவும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் 3 புதிய முக்கிய வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவையை நீட்டிக்க திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

பரிந்துரைக்கப்பட்டுள்ள 3 புதிய வழித்தடங்களின் விவரங்கள்:

1. சென்னை விமானநிலையம் -கிளாம்பாக்கம் (கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்)

தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை மிக விரைவாகவும் தடையின்றியும் சென்றடைய இது பெரிதும் உதவும். சென்னை வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரெயில் சேவை விரைவில் துவங்கும்.

2. கோயம்பேடு-பட்டாபிராம் (ஆவடி வழியாக):

மேற்கு சென்னை மற்றும் ஆவடி, பட்டாபிராம் பகுதி வாழ் மக்களின் நீண்ட நாள் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்யும்.

3.பூந்தமல்லி-சுங்குவார்சத்திரம் (ஸ்ரீபெரும்புதூர் வழியாக):

ஸ்ரீபெரும்புதூர் சுற்றியுள்ள தொழில் நிறுவனங்கள், தொழிற்பேட்டைகள் மற்றும் வரவிருக்கும் பரந்தூர் புதிய விமான நிலைய இணைப்புக்கு இப் பாதை முக்கியப் பங்காற்றும்.

போக்குவரத்து நெரிசல் குறைப்பு:

ஸ்ரீபெரும்புதூர் - சுங்குவார்சத்திரம் தொழிற்சாலை மண்டலங்கள் நேரடியாக நகரின் மையப்பகுதியுடன் இணைக்கப்படும். ஜி.எஸ்.டி சாலை (GST Road) மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு இது நிரந்தரத் தீர்வாக அமையும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், ஆவடி ரெயில் நிலையம் மற்றும் சென்னை விமான நிலையம் ஆகிய முக்கியப் போக்குவரத்து மையங்கள் மெட்ரோ நெட்வொர்க்குடன் ஒருங்கிணைக்கப்படும்.