விடுதலை சிறுத்தைகள் கட்சி, IUML கட்சிகள் தவெக அமைச்சரவையில் இணைந்தது குறித்து திமுகவினர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கு அன்பான் வேண்டுகோள் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்," திமுகவினர் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களை பேச வேண்டாம்" என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் வன்னி அரசு அவர்களுக்கும், ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்!
தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்.
பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.