தமிழக செய்திகள்

திருவொற்றியூரில் இரும்பு கதவின் துளையில் தலை சிக்கியதால் பரிதவித்த நாய்

சத்தம் கேட்டு வந்த ராமானுஜம் மற்றும் அவரது குடும்பத்தினர் நாயை மீட்க முயன்றும் முடியவில்லை.

தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி நாயை பத்திரமாக மீட்டனர். தலை சிக்கலில் இருந்து விடுபட்டதும் உற்சாகமடைந்த நாய் துள்ளிக் குதித்தபடி ஓடியது.

சென்னை எர்ணாவூர் இளங்கோ நகரைச் சேர்ந்த ராமானுஜம் தனது வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். நேற்று அதிகாலை அந்த நாய், வீட்டின் இரும்பு கதவில் அலங்காரத்துக்காக அமைக்கப்பட்டிருந்த துளையில் தலையை நுழைத்தது. பின்னர் தலையை வெளியே எடுக்க முடியாமல் சிக்கிக்கொண்டு குரைத்தது.

நாய்

சத்தம் கேட்டு வந்த ராமானுஜம் மற்றும் அவரது குடும்பத்தினர் நாயை மீட்க முயன்றும் முடியவில்லை. இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி நாயை பத்திரமாக மீட்டனர். தலை சிக்கலில் இருந்து விடுபட்டதும் உற்சாகமடைந்த நாய் துள்ளிக் குதித்தபடி ஓடியது.

SCROLL FOR NEXT