தமிழக செய்திகள்

மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பது தான் தி.மு.க.வின் நிலைப்பாடு- உதயநிதி ஸ்டாலின்

கலைஞர் ஆட்சிக்காலத்தில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேகதாது அணைக்கு எதிரான முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானத்தின் மீதான விவாகதத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தை வரவேற்கிறோம்.

மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பது தான் தி.மு.க.வின் நிலைப்பாடு.

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிக்கும் மேகதாது அணைக்கு எதிர்ப்பு என்பதே தி.மு.க.வின் நிலைப்பாடு.

கலைஞர் ஆட்சிக்காலத்தில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

நீண்ட நெடிய அரசியல், சட்டப்போராட்டங்களின் மூலம் காவிரியில் உரிமை பெற்றோம்.

காவிரியில் தமிழ்நாட்டின் உரிமை நிலைநாட்டப்பட்டதற்கு தி.மு.க.வே காரணம்.

ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திலேயே மேகதாது விவகாரத்தில மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார்.

மேகதாது அணைக்கு கர்நாடகா அரசு ரூ.1000 கோடி ஒதுக்கியபோது தனித்தீர்மானம் நிறைவேற்றினோம்.

2021 ஜூன் மாதமே மேகதாது அணைக்கு எதிராக பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

திமுக அரசின் தொடர்ச்சியான முயற்சிகளால் தான் மேகதாது திட்ட அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டது.

காவிரி நதிநீர் தொடர்பாக புதிய நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

மேகதாது அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை முறியடிக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் தி.மு.க. துணை நிற்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.