தமிழக செய்திகள்

சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து திமுக மகளிர் அணி போராட்டம் அறிவிப்பு

தலைநகரங்களில் வரும் 31ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தை திமுக அறிவித்துள்ளது.

ஆளும் ஆட்சியில் நிகழும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றச்சம்பவங்களை கண்டித்து திமுக மகளிர் அணி மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது.

கண்டன ஆர்ப்பாட்டம்

சட்டம்,ஒழுங்கு சீர்கேடை கண்டித்து வரும் 31ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தை திமுக அறிவித்துள்ளது .குறிப்பிடப்பட்ட தேதியில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமானதும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும்குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டதாகவும்,குற்றச்செயல்களில் ஆளும் தவெகவினரே பெரிய அளவில் ஈடுபடுவதாக செய்திகள் வருவதை குறிப்பிட்டு ஆர்ப்பாட்டமானது அறிவிக்கப்பட்டுள்ளது

சட்டம் ஒழுங்கை காக்கவோ , விலைவாசியை கட்டுப்படுத்தவோ தவெக அரசு முயலவில்லை என்றும் பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை படுகுழியில் தள்ளியுள்ள தவெக அரசை கண்டித்து 31ம் தேதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டத்தை திமுக மகளிரணி அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT