தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் தொகுதிகளின் வேட்பாளர்கள், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
கொளுத்தும் வெயிலிலும் குமரி மாவட்ட மகளிர் வெளிப்படுத்திய energy சொல்லிவிட்டது, திராவிட மாடல் 2.0 அமைவதை யாரும் தடுக்க முடியாது!
நாகர்கோயிலில் இன்று மக்கள் என்னுடைய உரைக்கு அளித்த வரவேற்பிலேயே குமரி மாவட்டத்தின் 6 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிதான் வெல்லும் என்பது முடிவாகிவிட்டது.
மதவெறியோடு சிறுபான்மையின மக்களுக்கு எதிராகத் திட்டமிட்டுச் சட்டங்களைக் கொண்டு வரும் பா.ஜ.க.வையும், அதற்குத் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல துணைபோகும் அ.தி.மு.க.வையும் மீண்டுமொருமுறை நிராகரிக்கத் தமிழ்நாடு காத்திருக்கிறது!
இவ்வாறு அவர் கூறினார்.