தமிழக செய்திகள்

தி.மு.க.விற்கு இனிமேல் இறங்கு முகம்: நாஞ்சில் சம்பத்

முதலமைச்சர் (மு.க. ஸ்டாலின்) தோல்வியடையனும், திமுக-விற்கு இனிமேல் இறங்கு முகம். வீழ்ச்சியை நோக்கி அவர்கள் பயணிக்கிறார்கள் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

த.வெ.க. பிரசார பிரிவு செயலாளர் நாஞ்சில் சம்பத் தவெக வெற்றி மற்றும் கொளத்தூரில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்து குறித்து கூறியதாவது:-

திமுக, அதிமுக-வைத் தவிர்த்த மாற்று சக்தி வர முடியாது என்கிற மாய கற்பனையை எங்களுடைய தலைவர் அவருடைய செல்வாக்கால், சாதுர்யத்தால் சம்மட்டி அடி கொடுத்து அப்புறப்படுத்தியுள்ளார். இந்த வெற்றிக்க நிகரான வெற்றியை இந்தியாவில் யாரும் பெற்றதில்லை.

36 கட்சிகள், 200 சாதிக்குழுக்கள் ஒன்றிணைந்து நின்ற போதிலும் அவர்களை தகர்க்க முடியும் என்று நிரூபித்திருக்கிற எங்கள் தலைவர் விஜய், தமிழ்நாட்டு அரசியலில் தள்ளிப்போட முடியாத ஒரு தாகம், அணைக்க முடியாது நெருப்பு. எம்.ஜி.ஆர்.க்கு பெண்கள் ஆதரவு இருந்தது. விஜய்க்கு பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆதரவும் இருந்தது.

முதலமைச்சர் (மு.க. ஸ்டாலின்) தோல்வியடையனும், திமுக-விற்கு இனிமேல் இறங்கு முகம். வீழ்ச்சியை நோக்கி அவர்கள் பயணிக்கிறார்கள். நாங்கள் சிகரங்களை நோக்கி சிறகுகளை விரிக்கிறோம்.

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் த.வெ.க.-வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.